உக்ரைனுக்கு அமெரிக்கா மீண்டும் ரூ.20,500கோடி ஆயுத உதவி

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி தொடங்கி போர் நடத்தி வருகின்றது. ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ள நிலையில், மீண்டும் ரூ.20,500கோடி மதிப்பிலான ராணுவ உதவியை அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவி ரூ.2.25லட்சம் கோடியாக அதிகரிக்கும். இந்த ராணுவ தொகுப்பில் உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் முக்கியமான கூடுதல் வான் பாதுகாப்பு ஆதரவு உள்ளிட்டவை அடங்கும். இரவில் பார்க்ககூடிய சாதனங்கள், சிறிய ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களும் இதில் இடம்பெறும். இதனிடையே அமெரிக்க உளவுதுறையான சிஐஏயின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த வாரம் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அந்நாட்டின் உளவுதுறை அதிகாரிகளை சந்தித்து பேசியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: