பஞ்சாப் அரசின் லாட்டரியில் முதல் பரிசை வென்ற முதியவர்: 88 வயது தாத்தாவுக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு..!

பஞ்சாப்: பஞ்சாபில் 88 வயது ஏழை முதியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் அரசு சிறப்பு பம்பர் லாட்டரி சீட்டினை வெளியிட்டு இருந்தது. ரூ.5 கோடி முதல் பரிசு என்பதால் பஞ்சாப் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதற்கான குலுக்கல் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இதில் தேராபாஸ்ஸி  என்ற கிராமத்தை சேர்ந்த 88 வயது முதியவரான மஹந்த் துவாரகா தாஸ் என்பவர் வாங்கியிருந்த சீட்டுக்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் சிரக்பூர் சென்றிருந்த தனது உறவினரிடம் பணம் கொடுத்து கடைசி நேரத்தில் முதியவர் தாஸ் வாங்கி வர சொன்ன லாட்டரி டிக்கெட்டு தான் அவருக்கு ரூ.5 கோடி அள்ளித்தந்து இருக்கிறது. 30% வரி பிடித்தம் போக கிடைக்கும் தொகையை 3-ஆகா பகிர்ந்து அதில் இரண்டு பங்கை தனது மகன்களுக்கு தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டசாலி தாத்தா மஹந்த் துவாரகா தாஸ் 40 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்த தாத்தாவை சமீபத்திய மகர சங்கராந்தி சிறப்பு குலுக்கல் கோடீஸ்வர பட்டியலில் இடம்பெற செய்திருக்கிறது.

Related Stories: