சென்னை அடையாற்றில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 140 சவரன் கொள்ளை போனதாக போலீசில் புகார்

சென்னை: சென்னை அடையாற்றில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் 140 சவரன் கொள்ளை போனதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அடையாறு காந்திநகர் பகுதியில் வசிக்கும் முகிலன் என்பவர் வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. முகிலன் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற நிலையில், குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இலங்கையில் இருந்து திரும்பிய முகிலன், வீட்டுக்கு வந்து பார்த்த போது 140 சவரன் காணாமல் போனதாக போலீசில் புகார் தெரிவித்தார்.

Related Stories: