புதுடெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கேள்வி கேட்க கவர்னர் யார் என்று டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: யார் இந்த கவர்னர்?. அவர் எங்கிருந்து வந்தார். நமது தலையில் உட்கார்ந்து அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறார். நம் குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார்? எங்களைத் தடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. நாளை நாம் ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வரலாம். எங்கள் அரசு மக்களை துன்புறுத்தாது. இந்த கவர்னர் என் பணிகளை சரிபார்ப்பது, எழுத்துப்பிழைகள், கையெழுத்து பற்றி புகார் செய்வது போல எனது ஆசிரியர்கள் கூட என்னுடைய வீட்டுப்பாடத்தை சரிபார்த்தில்லை. அவர் என் தலைமை ஆசிரியர் இல்லை.
