திருமலை: ஸ்ரீஹரிகோட்டாவில் பாதுகாப்பு பணியில் இருந்து 2 துணை ராணுவ வீரர்கள் திடீரென தூக்குப்போட்டும், துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் ரேடார் பிரிவில் சிஐஎஸ்எப் துணை ராணுவ வீரரான சிந்தாமணி நேற்று முன்தினம் காலை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பல மாதங்கள் நீண்ட விடுப்புக்கு பிறகு கடந்த 10ம் தேதி பணிக்கு திரும்பியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் ஸ்ரீஹரிகோட்டா முதல் நுழைவு வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சி-ஷிப்டில் பணியில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் சிங், தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.