24 பலாத்காரம் உட்பட 49 குற்றங்கள் அரங்கேற்றம் 12 பெண்களை சீரழித்த போலீஸ் அதிகாரி பகீர் வாக்குமூலம்: லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு

லண்டன்: லண்டனில் 12 பெண்களை சீரழித்த போலீஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல் துறை அதிகாரி டேவிட் கேரிக் என்பவர் கடந்த 2000 - 2021ம் ஆண்டுகளில் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களை சீரழித்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவருக்கு எதிராக புகாரளிக்க தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் கடந்தாண்டு பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார புகாரையடுத்து டேவிட் கேரிக் கைது செய்யப்பட்டார். அதன்பிறகுபல பெண்கள் அவர் மீது பாலியல் புகார்களை போலீசில் கொடுத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டேவிட் கேரிக் அளித்த வாக்குமூலத்தில், தான் 12 பெண்களை 24 முறை பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட 49 குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

 இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜஸ்வந்த் நர்வால் கூறுகையில்:

குற்றம்சாட்டப்பட்ட டேவிட் கேரிக், தான் 49 குற்றங்களை செய்ததாக ஒப்புக் கொண்டார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் காவல்துறை அதிகாரியாக அவர் பணியாற்றினார். கொரோனா லாக்டவுன் காலத்தில், சாரா எவரார்ட் என்ற இளம் பெண்ணைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தார். கடந்த டிசம்பரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார். பணியில் இருக்கும் காலத்தில் இத்தனை குற்றங்களை செய்த டேவிட் கேரிக்குக்கு, அடுத்த மாதம் நீதிமன்றம் தண்டனை அளிக்கும்’ என்றார்.

Related Stories: