வெளிநாடுகளில் படிக்க செல்லும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

புதுடெல்லி: வெளிநாடு படிப்புக்கு செல்ல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் முன்பு மாநிலத்தில் போதுமான அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டில் படிக்கும் விடுப்புக்கான ஒப்புதல் வழங்கும் முன்பு மாநில அரசிலும், ஒன்றிய அரசின் பணியிலும்  போதுமான எண்ணிக்கையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உரிய விடுமுறை வழங்கும் முன்பு ஒன்றிய அரசின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் விடுப்பில் இருந்து திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட பணியிடங்களையும் மாநிங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி பற்றிய விவரங்கள், இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியேயும் ஆய்வு விடுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: