‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்ற அமெரிக்க அழகி: இந்தியாவுக்கு 16வது இடம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல், ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில், (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி - 2022ம் ஆண்டின் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்’போனி கேப்ரியல் (28) கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 86க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர். வெனிசுலாவின் டயானா சில்வா 2வது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா 3வது இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட திவிதா ‘சோன் சிரியா’ உடையணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அவர் 16வது இடத்தை பிடித்தார். உலக அழகி பட்டம் பெற்ற ஆர்’போனி கேப்ரியல், ‘மாக்பீஸ் அண்ட் பீகாக்ஸில்’ என்ற பேஷன் நிறுவனத்தில் தையல் பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: