தியேட்டரில் கலாட்டா பாலய்யா ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்: அமெரிக்காவில் அதிரடி

நியூயார்க்: என்.டி.பாலகிருஷ்ணா (பாலய்யா) நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் நேற்று வெளிநாடுகளில் வெளியானது. பல நாடுகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. அந்த வகையில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருந்தது. படம் தொடங்குவதற்கு பல மணி நேரத்துக்கு முன்பாகவே தியேட்டரில் ரசிகர்கள் கூடினர். படம் திரையிடத் தொடங்கியதும் ரசிகர்கள் கூச்சலிட்டபடி என்.டி.பாலகிருஷ்ணாவின் என்ட்ரி காட்சிக்கு ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட்டபடியும் பேப்பர் துண்டுகளை திரையை நோக்கி வீசியபடியும் இருந்தனர்.

இந்த அனுபவம் அங்குள்ள தியேட்டர்களுக்கு புதிது. இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் நிர்வாகம், படத்தை நிறுத்திவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தது. தியேட்டருக்கு வந்த போலீசார். திரையின் முன் உள்ள மேடையில் ஏறி, ‘நீங்கள் இப்படி செய்வது எங்கள் நாட்டின் சட்டதிட்டத்துக்கு விரோதமானது. தொடர்ந்து உங்களை படம் பார்க்க அனுமதிக்க முடியாது. நீங்களாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் வெளியேற்றுவோம்’ என்று கூறினார்கள். இதை தொடர்ந்து ரசிகர்கள் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக வெளியேறினார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Stories: