தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகணக்கை ஹேக் செய்து ரூ2.61 கோடி கொள்ளை: 2 நைஜீரியர்கள் கைது

டெல்லி: தமிழ்நாடு கூட்டுறவு வங்கி கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 2.61 கோடி ரூபாய் பணம் திடீரென மாயமானது. அதன் பின்னர் காவல் துறையிடம் வங்கி பணியாளர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது வங்கிக்கு கீ லாக்கர் என்ற ஒரு மெயில் வந்துள்ளது. அந்த மெயிலை வங்கியாளர்கள் ஓபன் செய்து பார்த்துள்ளனர்.

அந்த மெயிலை ஹேக்கர் அனுப்பியது என்று தெரியாமல் ஓபன் செய்து பார்த்துள்ளனர். அந்த வேலையில் வங்கியின் கணினி கட்டுப்பாடு ஹேக்கர் கை வசம் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து வங்கியின் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்ஸ் கணக்கிலிருந்து 2.61 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையக கணக்கை ஹேக் செய்து ரூ2.61 கோடி கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி உத்தம்நகரில் பதுங்கியிருந்த 2 நைஜீரியர்களை சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளனர்.

Related Stories: