வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்ட வாரிசு பட டிக்கெட் க்யூஆர் கோட் மூலம் திருட்டு: திருத்தணியில் பரபரப்பு சம்பவம்

சென்னை: ‘வாரிசு’ படத்துக்காக ஆன்லைனில் புக் செய்த டிக்கெட்டை ஒரு இளைஞர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். அந்த புகைப்படத்தை பயன்படுத்தி, அதிலிருந்த க்யூஆர் கோட் மூலம் அந்த டிக்கெட்டை ஒருவர் திருடி விட்டார். திருத்தணியில் இந்த நூதன சம்பவம் நடந்தது. திருத்தணியில் உள்ள ஒரு தியேட்டர் காம்பளக்சிஸ் வாரிசு மற்றும் துணிவு படம் நேற்று ரிலீஸ் ஆனது. விஜய் ரசிகர் ஒருவர் நேற்று மாலை 6.30 மணி காட்சிக்காக தான் வாங்கிய 3 நபர்களுக்கான வாரிசு பட டிக்கெட்டை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டார். இந்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்த டிக்கெட்டை பெறுவதற்காக அந்த ரசிகர் தியேட்டருக்கு சென்று பார்த்த போது, இந்த டிக்கெட்டை வேறு யாரோ வாங்கி விட்டதாக தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ரசிகர் விசாரித்த போது, அந்த ஆன்லைனில் வாங்கிய டிக்கெட்டில் இருந்த க்யூ ஆர் கோட்-ஐ நூதன முறையில் பதிவிறக்கம் செய்து அதை பயன்படுத்தி 3 டிக்கெட் வாங்கியது தெரியவந்தது. ஆனால் டிக்கெட் வாங்கியது யார் என்ற விவரம் தெரியவில்லை.

Related Stories: