திருப்பூரில் ஆளுநருக்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் ஆளுநருக்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர் என்.ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்டவரின் பெயரை குறிப்பிடாமல் தமிழக அரசின் ஆளுநர் உரையை படித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இதனால் நாளைய தினம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தப்படும் என திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , மதிமுக , இந்திய தேசிய காங்கிரஸ், கொங்கநாடு மக்கள் தேசிய கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: