புவனேஸ்வர்: காங்கிரஸ் எம்எல்ஏ தாரா பிரசாத் பாகினிபதி, தனது மனைவிக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் ஜேப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரா பிரசாத் பாகினிபதி, தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரது மனைவி மினாகி பாகினிபதியுடன் கலந்து கொண்டார். அப்போது தம்பதியை உள்ளூர் மாலை அணிவித்து கவுரவித்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். திடீரென உணர்ச்சிவசப்பட்ட எம்எல்ஏ, தனது மனைவியின் கையை பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார்.