காக்கி நிற அரை டிரவுசர்கள் அணிந்தவர்கள் தான் இந்த 21ம் நூற்றாண்டின் கௌரவர்கள்: ஆர்.எஸ் .எஸ் அமைப்பு குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

அரியானா: காக்கி நிற அரை டிரவுசர்கள் அணிந்தவர்கள் தான் இந்த 21ம் நூற்றாண்டின் கௌரவர்கள் என்று ஆர்.எஸ் .எஸ் அமைப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார். இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அரியானாவில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசினார். அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து கடுமையாக சாடியவர். பஞ்சபாண்டவர்கள் எவர் மீதாவது வெறுப்பை உமிழ்ந்தார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா என்று கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

 காக்கிநிற அரை டிரவுசர்கள் அணிந்து, கையில் கம்புகளை பிடித்து கொண்டு ஷாகாக்களை நடத்துபவர்கள் தான் 21ம் ஆண்டின் கவுரவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். கவுரவர்கள் பக்கம் இரண்டு அல்லது மூன்று கோடீஸ்வரர்கள் தான் இருக்கிறார்கள் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். பாண்டவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்களா தவறான ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தினார்களா என்றும் கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, தவறான ஜி.எஸ்.டி, வேளாண் திருத்த சட்டம் ஆகியவை திருடுவதற்கான வழிகள் என்று பாண்டவர்கள் அறிந்திருந்தார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினரை பஞ்சபாண்டவர்கள் என்று உருவகப்படுத்திய ராகுல் தங்கள் பக்கம் அனைத்து மத மக்களும் இருக்கிறார்கள் என்று கூறினார். இன்றும் அவர் அறியானாவின் அம்பாலாவில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: