ரஷ்யா தாக்குதல் உக்ரைன் வீரர்கள் 600 பேர் பலி

கிராமடோர்ஸ்க்: உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலை தொடுத்து உள்ளது. அங்கு 600 வீரர்கள் பலியாகி விட்டனர். உக்ரைன்-ரஷ்ய போர் ஆர்தோடாக்ஸ் கிறிஸ்துமஸ் விழாவுக்கு நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். ஆனால் உக்ரைன் இதை ஏற்கவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்ததும் நேற்று உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகர் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியது.

அங்குள்ள பள்ளியில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களது 2 முகாம்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கியிருந்த 1300 வீரர்களில் 600 பேர் பலியாகி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. இதை உக்ரைன் மறுத்துள்ளது.

Related Stories: