‘அரிசி ராஜா’வை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிரம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புளியம்பாறை பகுதியில் பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி ராஜா யானை, தற்போது கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயம் குப்பாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பத்தேரி நகர் பகுதிக்குள் புகுந்து சாலையில் நடந்த சென்ற ஒருவரை தூக்கி வீசியது. வீடுகளை உடைத்து அரிசி மற்றும் உணவுப்பொருளை தேடிய இந்த யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லும்படி போராட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் நடவடிக்கையில் கால்நடை மருத்துவர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். 2 கும்கிகளும் வரவழைக்கப்பட்டது. இந்த பணி நேற்று 2வது நாளாக நடந்தது. நேற்று இப்பகுதிக்கு கேரளா வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: