அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடக்கும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் தகுதி பெற்றார். அரையிறுதியில் முன்னாள் நம்பர் 1 வீரர்களான ஜோகோவிச் (35 வயது, 5வது ரேங்க்), ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் (26 வயது, 7வது ரேங்க்) மோதினர். நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இருவரும் வெற்றிக்காக கடுமையாகப் போராடினர். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் மெத்வதேவ் கடும் நெருக்கடி கொடுத்தார். எனினும், பதற்றமின்றி விளையாடிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.