இந்தியா-இலங்கை தொடரை விளம்பரதாரர்கள் புறக்கணிப்பு; ரூ.200 கோடி வருவாய் இழப்பை சந்திக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

மும்பை: இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியா-இலங்கை தொடருக்கான ஒளிபரப்பு உரிமைக் கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூ.60.01 கோடியை பிசிசிஐக்கு அந்நிறுவனம் செலுத்துகிறது. இந்நிலையில் இந்த தொடரை விளம்பரதாரர்கள் முற்றிலும் புறக்கணித்துள்ளனர். நேற்று நடந்த போட்டிக்கு ஹாட்ஸ்டாரில் ஒரு பிரதான விளம்பரதாரர் கூடஇல்லை.

பெரும்பாலும் விளம்பரங்கள் இன்றி போட்டி ஒளிபரப்பானது. இதனால் போட்டிக்கான உரிமம் தொகையில் 30-40% மட்டுமே விளம்பரம், தொடர்புடைய விற்பனை மற்றும் சந்தா மூலம் திரும்பப் பெற முடியும். எனவே இந்த தொடரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.200 கோடி இழப்பை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜெர்சி ஸ்பான்சரில் இருந்து எம்பிஎல் விலகிய நிலையில், கேவல் கிரண் கிளாதிங் லிமிடெட் (கேகேசிஎல்) க்கு உரிமையை வழங்கியுள்ளது.

இதேபோல் பிசிசிஐயின் உள்நாட்டு போட்டிக்கான உரிமைகளை வைத்திருந்த பேடிஎம் விலகியநிலையில், அதை மாஸ்டர்கார்டுக்கு மாற்றிஉள்ளது குறிப்பித்தக்கது. மேலும் பைஜூஸ் நிறுவனமும் வரும் மார்ச் மாதத்துடன் ஒப்பந்தத்தில் இருந்துவிலக முடிவு செய்துள்ளது.  இதனால் பிசிசிஐக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: