அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார்: செல்லூர் ராஜூ பாராட்டு

மதுரை: சர்வதேச அளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபடிப்போட்டிக்கு இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான கபடிப்போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்து வருகிறது. இப்போட்டிகளை நேற்று துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது. தற்போது திமுக ஆட்சியில், அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இவர் விளையாட்டுத்துறையில்  நிறைய செய்வார். சிறப்பாக செயல்படுவார். கூடுதலாக விளையாட்டு ஸ்டேடியங்கள் அமைத்து கொடுப்பார். அவருக்காக நான் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்.

Related Stories: