பெண்களுக்கு தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது என்று இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது என இந்தியன் சயின்ஸ் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களுக்கு பயன்படாவிட்டால் புதிய கண்டுபிடிப்புகளால் பலன் இருக்காது என பிரதமர் கூறியுள்ளார். நாக்பூரில் 108 வது அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். விஞ்ஞானம், தொழில்நுட்பத்தால் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால் இந்தியா வளரச்சி பெறுகிறது. நோய்களில் இருந்து மக்களை காக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்

இன்று இந்தியா ஸ்டார்ட்அப்களில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக உள்ளது. 2015 வரை 130 நாடுகளின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81வது இடத்தில் இருந்தோம், ஆனால் 2022-ல் 40வது இடத்தை அடைந்துள்ளோம். அறிவியல் இந்தியாவை ஆத்மநிர்பர் ஆக்க வேண்டும். அறிவியலின் முயற்சிகள் ஆய்வகங்களில் இருந்து நிலத்திற்குச் செல்லும்போதுதான் பலனைத் தரும். 2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தினை மற்றும் அவற்றின் பயன்பாடு அறிவியலைப் பயன்படுத்தி மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, மத்திய மந்திரி நிதின் கட்காரி, மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங், மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

Related Stories: