உலகளவில் 95 நாடுகள் பட்டியலில் ருசியான உணவில் இந்தியாவுக்கு 5வது இடம்: ‘டேஸ்ட் அட்லஸ்’ ஆய்வில் தகவல்

ரோம்: உலகளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ருசியான உணவில் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளதாக  ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் சிறந்த உணவு வகைகள் குறித்து ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ‘உலகம் முழுவதும் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. 95 நாடுகளின் சிறந்த உணவுகள் மற்றும் அதனை விரும்பி சாப்பிடுவோரின் கருத்துகளின்படி பட்டியலிடப்பட்டது. இந்த பட்டியலில் 4.54 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சுமார் 460 உணவு வகைகள் விரும்பி சாப்பிடும் உணவு பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு நகரத்திற்கும் ஒருவகையான உணவு வகைகள் பிரபலமாக உள்ளது. உலகளாவிய பட்டியலில் முதல் இடத்தை இத்தாலியும், இரண்டாவது இடத்தை கிரீசும், மூன்றாவது இடத்தை ஸ்பெயினும், நான்காவது இடத்தை ஜப்பானும், எட்டாவது இடத்தை அமெரிக்காவும், 10வது இடத்தை சீனாவும், 43வது இடத்தை வங்கதேசமும், 47வது இடத்தை பாகிஸ்தானும் பெற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: