துருக்கியில் பிரபலமாகி வரும் வித்யாசமான இசைக்குழு!: குப்பையில் வீசப்படும் கழிவு பொருட்களை வைத்து கிடார், டிரம்ஸ்…சமூக வலைத்தளங்களில் வரவேற்பு..!!

இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் இசைக்குழு ஒன்று குப்பைகளில் வீசப்படும் பொருட்களை சேகரித்து அவற்றை இசை கருவிகளாக மாற்றி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இஸ்தான்புல் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் தான் இந்த குழுவினரின் இசை தேடல் நடைபெறுகிறது. 
பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்று குப்பையில் வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மரத்துண்டுகள், கயிறு, அழைப்பு மணி உள்ளிட்ட பொருட்களை சேகரிக்கும் இசைக் கலைஞர்கள் அவற்றில் தேவைப்படும் மாற்றங்களை செய்து மதிப்புமிக்க பாரம்பரிய இசைக்கருவிகளை போல இன்னிசை வழங்கும் வாத்தியங்களாக மாற்றுகின்றனர். 
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுயற்சி செய்வதில் புதிய முயற்சியாக இசைக் கருவிகளை உருவாக்கும் செயல்பாட்டுக்கு துருக்கியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. குப்பைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை வாத்தியங்களாக மாற்றி குழுவினர் இசைக்கும் காணொளிகளும் வலைத்தளங்களில் ரசிர்களை கவர்ந்து வருகின்றன. 

The post துருக்கியில் பிரபலமாகி வரும் வித்யாசமான இசைக்குழு!: குப்பையில் வீசப்படும் கழிவு பொருட்களை வைத்து கிடார், டிரம்ஸ்…சமூக வலைத்தளங்களில் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: