தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 2012ல் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்றையக் காலக்கட்டத்தில் இந்த ஊதியம் போதுமானதல்ல. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்தும் இன்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை, அவர்களுக்கு சம்பள உயர்வும் அறிவிக்கவில்லை. எனவே தமிழக அரசு, பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையான அவர்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்.

Related Stories: