சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 2012ல் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 2014ல் 2 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, 2017ல் 700 ரூபாய் சம்பள உயர்வு, 2021ல் ரூ. 2,300 சம்பள உயர்வு வழங்கப்பட்டு இப்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.