புதுடெல்லி: குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் விதமாக,டெல்லி அரசு பள்ளிகளில் மினி சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு ஆம் ஆத்மி செய்துள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசு பள்ளி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை காத்து ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கும் விதமாக அடுத்த முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி மதிய உணவுக்கு முன்பாக மினி சிற்றுண்டி இடைவேளை திட்டத்தை அறிமுகம் செய்யப்படுகிறது.