மாதவரத்தில் ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி மையம்; எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: மாதவரத்தில், எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 33வது வார்டுக்குட்பட்ட அசோகா தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாக இருந்தது. இதனை, சீரமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, 2021-22ம் ஆண்டுக்கான மாதவரம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்தது.

தற்போது, இப்பணி முடிவடைந்த நிலையில், குழந்தைகளின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். கவுன்சிலர் குணசுந்தரிகுட்டி மோகன் முன்னிலை வகித்தார். மாதவரம்  எம்எல்ஏ சுதர்சனம் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், இனிப்பு ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் ராஜ், அதிகாரிகள், திமுக பகுதி செயலாளர் துக்காராம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: