இந்தியா முழுவதும் தினமும் 86 பெண்கள் பலாத்காரம்: பிருந்தா காரத் குற்றச்சாட்டு

அகர்தலா: இந்தியா முழுவதும் தினமும் 86 பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக மா.கம்யூ மூத்த தலைவர் பிருந்தா காரத் குற்றச்சாட்டினார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த கூட்டத்தில் மா.கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், ‘இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 86 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6,000க்கும் மேற்பட்ட பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிருடன் எரிக்கப்படுகின்றனர்.

திரிபுராவில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் மாஃபியா ஆட்சியை நடத்தி வருகிறது. பாஜக தலைவர்கள் சிலர் பலாத்காரம் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திரிபுராவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நிர்பயா நிதியாக ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டும், பெண்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்பட்டவில்லை. அந்த நிதியில் மூன்றில் ஒரு பங்கைக்கூட செலவழிக்கவில்லை’ என்றார்.

Related Stories: