சிவகங்கை பனங்குடியில் இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து கட்டிய பள்ளிவாசல் திறப்பு

சிவகங்கை: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, சிவகங்கை மாவட்டம், பனங்குடியில் இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து கட்டிய பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது. காரைக்குடி அருகே உள்ளது பனங்குடி கிராமம். இந்த கிராமத்தில் இந்து கோயில், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசல் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.

இங்குள்ள 200ஆண்டுகள் பழைய பள்ளிவாசல் மிகவும் சிதிலமடைந்திருந்தது. பள்ளிவாசலை கட்ட கிராமத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு , மத பேதமின்றி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்து, சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாக பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்து கோயில்களில் பூஜைகள் செய்த பின்னர், கிராம மக்கள் ஒன்று கூடி பள்ளிவாசல் திறப்பு விழாவை பிரமாண்டமாக கொண்டாடினர்.

Related Stories: