மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்

சென்னை: சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இருப்பிடச் சான்று, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று, 2 வண்ண புகைப்படம் அளித்து அடையாள அட்டை பெறலாம்.

The post மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.

Related Stories: