தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசியை வழங்க வேண்டும்: ஒன்றிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னை: தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்-National Animal Disease Control Programme-NADCP) கடந்த செப்டம்பர் 2022-ல் வழங்கவேண்டிய  தடுப்பூசி ஒன்றிய அரசால் இதுநாள் வரையில் வழங்கப்படாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களுக்கு இன்று (17-12-2022) கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: