புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநிலத்தின் அனைத்து கட்சிகளின் கோரிக்கையாகும். இந்த சூழலில் ஆளும் கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கி ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.நேரு தலைமையில் 60 அமைப்புக்கள் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த அமைப்புகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை சட்ட பேரவையில் முதலமைச்சரிடம் அந்த அமைப்பினர் அளித்தனர். அதை பெற்று கொண்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி மாநில அந்தஸ்து இல்லாததால் பல விஷயங்களை செய்ய முடியாத நிலை உள்ளது என்றார். இதனால், அதிகமான மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
