திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்: தமிழக அரசுக்கு மக்கள் நன்றி

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் திமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வரும் பொங்கலன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வரவேற்றுயுள்ள அலங்காநல்லூர் கிராமமக்கள் பட்டாசு,வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ராமநாதபுரத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா். இதனிடையே  ஜல்லிக்கட்டு போட்டிகளிகளுக்கான காளைகளை தயார்படுத்தும் பணியில் அவற்றின் உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

திருக்கள் மாவட்டம் வேலசந்தர் தாலுகாவுக்கு உட்பட செங்குளதுப்பட்டி உள்ள சோலமுத்து கடந்த 30 ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வரும் நிலையில் தை பொங்கலுக்கு ஒரு மதம் மட்டுமே உள்ள நிலையில் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயார் படுத்தி வருகிறார். இது போலவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயாா் படுத்தி வருகின்றனாா். தை ஒன்றாம் தேதி அமயபுரத்திலும் இரண்டாம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று பாலமேடு கிரமாத்திலும் உழவர் தினத்தன்று அலங்காநல்லுரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஏற்கனவே இந்தஊர்க்காலில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கன காளைகள் தயார்செய்யும் பணிந நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவுப்பு அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை எற்படுத்தியுள்ளது.

 

Related Stories: