ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு, வெள்ளி கதவுகள் அமைக்கும் பணிகள்: அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி பங்கேற்பு

சென்னை: மதுரை மாவட்டம் கள்ளழகர் கோயிலின் உபகோயிலான அழகர்மலை, ராக்காயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள்  சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 2022-23ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, “1,000 கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம், கள்ளழகர் கோயிலின் உபகோயிலான அழகர்மலை, இராக்காயி அம்மன் கோயிலில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தட்டோடு பதிக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணி, கைப்பிடிச் சுவர் உயர்த்திக் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் முடிவுற்று, நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து, ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் வீற்றிருக்கும் வித்தக விநாயகர், முருகன், வேல் ஆகிய சன்னதிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய மரக்கதவுகள் தயார் செய்து சுமார் 250 கிலோ எடையிலான வெள்ளித் தகடுகள் பதிக்கும் பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Related Stories: