மாண்டஸ் புயல்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 186 சிறிய ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்: மாண்டஸ் புயல்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 186 சிறிய ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல்மழை காரணமாக சூறைகாற்றுடன்  பரவலாக மழை பெய்தது. அந்தவையில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

காஞ்சிபுரம் மாதா கோவில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர்,  விளக்கடி பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாகுட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர் மேடு போன்ற பகுிதிகளில் மழைநீர் தேங்கியதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைகாரணமாக நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வேகமாக வந்துகொண்டிருக்கிறது.

உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம்ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி,  கோவிந்தவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி உள்ளிட்ட 183 சிறிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஏரியில் நிறைந்த மாவட்டத்தில்  381ஏரிகள் உள்ளன. இதில், 111 ஏரிகள் 76 சதவீதமும், 62 ஏரிகள் 50 சதவீதமும், 25 ஏரிகள் 25  சதவீதமும்  நிரம்பியுள்ளன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  இதுபோல் தென்னேரி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் உள்ளிட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் முழு கொள்ளளவை எட்டிய தாமல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: