ஒரேபாலின திருமணத்தை பாதுகாக்கும் சட்டத்துக்கு இறுதி ஒப்புதல்

வாஷிங்டன்: ஒரேபாலின திருமணத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு அமெரிக்கா நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ஒரேபாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது கடந்த 2015ம் ஆண்டு சட்டபூர்வமானது. முன்னதாக 36 மாகாணங்களில் மட்டுமே ஒரேபாலின திருமணங்கள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

ஒரேபாலின திருமணத்தை பாதுகாக்கும் சட்ட மசோதா பிரதிநிதிகள் சபையில் 39 குடியரசு கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் 258 க்கு 169 வாக்குகளைப் பெற்று நிறைவேறியது. கடந்த வாரம் செனட் சபையில் 61-36 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.  

இந்நிலையில், அமெரிக்காவில் இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து,  அமெரிக்க அதிபர் பைடனின் கையொப்பத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டால் இது சட்டமாகிவிடும்.

Related Stories: