பெரம்பலூர் மாவட்டத்தில் செங்கரும்புக்கு தோகை கழிக்கும் பணி விறுவிறுப்பு

பெரம்பலூர் : பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தித்திக்கும் செங்கரும்புக்குத் தோகை கழிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.

தமிழர்களின் கலாச்சாரத் தை, பண்பாட்டை வெளிப்படுத்தும், உழவுத் தொழிலைப் பெருமைபடுத்தும் ஒப்பற்ற திருநாளான பொங்கல் திருநாள் ஜனவரி 14ம்தேதி (தை 1ம்தேதி) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றால் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வருவது தித்திக்கும் செங்கரும்புதான்.

சிறியவர் முதல் பெரியவர் விரும்பி ருசித்து உண்ணக் கூடிய செங்கரும்பு, உண்பதற்கு மட்டுமன்றி, வீடு, வாசல், கடைகள், வாகனங்கள் என அனைத்திலும் அமைக்கப்படும் அலங்காரத் தோரணங்களில் அதிமுக்கியமாக இடம் பெறக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. இதன் காரணமாக செங்கரும்பு இல்லாமல் பொங்கல் திருநாள் ஒருவருடமும் நம்மைக் கடந்து செல்ல முடியாது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரடப்படும் சாதாரணக் கரும்பை நம்பி, எறையூரில் பொதுத்துறை சர்க்கரை ஆலையும், உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலையும் உள்ளன. சர்க்கரை, எத்தனால், ஸ்பிரிட், மின்சார உற்பத்திக்கு சாதாரண கரும்புகள் பயன்பட்டாலும், செங்கரும்பு ருசித்து சாப்பிட ஏற்றதாக மிருதுவாகக் காணப்படுவதால் செங்கரும் புக்குத் தனிமவுசு உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு திண்டுகல், ஒட்டன்சத்திரம், குளித்தலை, தொட்டியம் பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் செங்கரும்பு இறக்குமதி செய்யப்பட்டாலும், அவைகளுக்குப் போட்டியாக பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தத்தில் சுமார் 10 ஏக்கரில் பயிரிடப்படும் செங்கரும்புக்கும் செமகிராக்கியுண்டு.

பெரம்பலூர் மாவட்டத்தில் 50 வருடங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பயிரிட்ட செங்கரும்பு, தற்போது சாகுபடிப் பரப்பு வெகுவாகக் குறைந்து, களரம்பட்டியைச் சேர்ந்த

ரெங்கராஜ்(51), அய்யாக்கண்ணு(50), அம்மாபாளையத்தைச் சேர்ந்த தியாகராஜன்(60), தேவராஜ்(55), வெங்கடேசன், ராமசாமி(60) உ ள்ளிட்டோரும், கோனேரிப்பாளையம், செட்டிக்குளம், மலையாளப்பட்டி, சோமண்டாபுதூர், எளம்பலூர், விளாமுத்தூர் விவசாயிகளும் என 25 முதல் 30 பேர்களே பயிரிட்டுவருகின்றனர். சித்திரை மாதம் பயிரிடப்பட்டு, மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புக்கு தற்போது தோகைகளைக் கழித்தெடுக்கும் நேரமாக உள்ளது. சரியாக இன்னும் 30 நாள் கடந்தவுடன் அறுவடைசெய்து பொங்கலுக்கு சிலநாளிலே விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை வழியில் சாகுபடி

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் தீரன் நகரில் வசிக்கும் தியாகராஜன் கூறுகையில், 35 வருடங்களாக செங்கரும்பு பயிரிட்டு வருகிறேன். ரசாயணக் கலப்பின்றி, இயற்கை முறை சாகுபடியில் கரும்புப் பயிரிட்டுள்ளேன். இதற்காக வயலிலேயே பஞ்சகாவ்யா, ஜீவா அமிர்தக் கரைசல், 10கிலோ மீன் கழிவு, சமஎடைக்கு 10 கிலோ வெல்லம், வாழைப்ப ழங்கள் கலந்து தயாரித்த மீன்அமிலம், ஆட்டு எரு ஆகியவற்றை உரமாக பயன்படுத்தி வருகிறேன். டோல்கேட் அருகே பில்லுக் கரும்பு வாங்கி வந்துதான் பயிரிட்டுள்ளேன். இயற்கை சாகுபடியென்பதால் வயலைத் தேடி வியாபாரிகள் வருகிறார்கள், அரசு கொள்முதல் செய்தாலும் தேடிச்சென்று கொடுப்பேன் எனத்தெரிவி த்துள்ளார்.

Related Stories: