ஈராக்கில் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் மோதல்; 2 பேர் பலி

ஈராக்: ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி இருந்து வருகிறார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது. ஈரான் தெற்கு நகரமான நசிரியாவில் அரக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர்.

இதனால் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதனால் பெரும் கலவரமாக மாறியது. அதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: