விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எல்லை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (60), விவசாயி. மனைவி முத்தம்மாளுடன் (55) வசித்து வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு ஒரு பகுதியில் முத்தம்மாளும், மற்றொரு பகுதியில் வீராசாமியும் படுத்து தூங்கினர். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையின் மேல் பகுதியில் இருந்த ஜன்னல் கம்பிகள் உடைத்து நீக்கப்பட்டு அதன் வழியே வந்த கொள்ளையர்கள் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகை மற்றும் ரூ.5.75 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து வீராசாமி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: