தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆளுநர்: பாலகிருஷ்ணன் கண்டனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், திருநங்கைகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது மாநில மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 686.406 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதியை, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. கிராம மக்கள், பழங்குடியின மக்கள் பாதிக்கப்படாத வகையில், வனவிலங்குகள் சரணலாயம் அமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: