ஒன்றிய அரசுக்கு எதிராக பேசினால் ஆட்சியை கவிழ்ப்போம் என மிரட்டுகிறார்: பிரதமர் மீது சந்திரசேகரராவ் குற்றச்சாட்டு

மகபூப்நகர்: ‘ஒன்றிய அரசுக்கு எதிராக ஏதாவது பேசினால் மாநில அரசை கவிழ்ப்போம் என்று பிரதமர் மோடி மிரட்டுகிறார் என  தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா, மகபூப்நகர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகரராவ்   நேற்று பேசியதாவது:  

அரசியல் லாபங்களுக்காக மக்களிடையே வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு தேசத்தின் உயிர்நாடி சிதைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.  கேசிஆர்,உங்கள் அரசை கவிழ்ப்போம் என பிரதமர் மோடி பகிரங்கமாக மிரட்டுகிறார். உங்களுடைய அரசை போல் எங்களுடைய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசை கவிழ்ப்பதற்கான காரணத்தை மோடி சொல்ல வேண்டும்.

ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது ம், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதும் மக்கள் கையில் உள்ளது.  ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினால் மாநில அரசை அகற்றுவோம் என அவர் மிரட்டுகிறார். எங்கள் கட்சியை உடைக்க சில திருடர்கள் சதி செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: