போலீசுக்கு மிரட்டல் பாஜ நிர்வாகி கைது

காங்கயம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து காங்கயத்துக்கு அரசு பஸ் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. இதில் பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, காங்கயம் போலீஸ்காரர் ரமேஷ் பயணித்தனர். அந்த பஸ்சில் ஆண் ஒருவர், ஒரு பெண்ணின் காலை மிதிக்கவே அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

போலீஸ்காரர் ரமேஷ் அதுபற்றி கேட்டபோது பாஜ தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, போலீஸ்காரரை மிரட்டியுள்ளார். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பாஜ நிர்வாகி ராஜா, போலீஸ்காரரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து பாஜ நிர்வாகி ராஜாவை கைது செய்தனர்.

Related Stories: