ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 1.1.2022 முதல் 2.12.2022 வரை சென்னையில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 268 குற்றவாளிகள் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 453 பேர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 26.11.2022 முதல் 2.12.2022 வரையிலான ஒரு வாரத்தில் (போலியாக வங்கியை துவக்கி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவர், பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பாட்டிலால் முகம், தலை மற்றும் உடலில் தாக்கிய நபர் என 11 குற்றவாளிகள்), குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: