தனியார் நிதி நிறுவனத்தை ஏமாற்றி ரூ.4 லட்சம் கடன் பெற்றவர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (எ) ராஜ் (38). இவர் கொடுங்கையூர் பகுதியில் தங்கி இருப்பதாகவும், பல்வேறு போலியான ஆவணங்களை தயார் செய்து தனியார் நிதி நிறுவனம் மூலமாக கடன் பெற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி உள்ளார். அதன் பிறகு கடத்தொகையை முறையாக கட்டமால் இருந்து வந்தார். இதனால், அண்ணா சாலையை சேர்ந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கொடுங்கையூர் ட ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்து நேற்று முன்தினம் ராஜேசை கைது செய்தனர். விசாரணையில், தனியார் நிறுவனம் மூலம் அவர் ரூ.4 லட்சம் வரை கடன் பெற்று பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் மீது ஏற்கனவே தண்டையார்பேட்டை மற்றும் மத்திய குற்றப்பிரிவில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனால், போலி ஆவணங்களை வைத்து தனியார் நிதி நிறுவனத்தை ஏமாற்றி கடன் பெற்ற காரணத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து, கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.

Related Stories: