வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2.50 கோடி கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இருந்து  இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்  சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செருதூர் வெள்ளையாற்றின் கரையோரம் நிறுத்தி இருந்த படகை எடுப்பதற்காக 3 பேர் வந்தனர். சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், படகு அருகே சென்ற போது தப்பியோடி முயன்ற 3பேரை விரட்டி சென்று பிடித்தனர்.

விசாரணையில், மீனவர் சந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதும், அவர்கள் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தை சேர்ந்த அருளழகன்(23), காஞ்சிநாதன்(27), நாலுவேதபதியை சேர்ந்த வேணுகோபால்(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் படகை சோதனை செய்த போது, ஐஸ்பெட்டியில் 9 மூட்டைகளில் 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்து அவர்களது வீடு மற்றும் படகு உரிமையாளர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related Stories: