விஜய் ஹசாரே டிராபி ஜாக்சன் அதிரடியில் சவுராஷ்டிரா சாம்பியன்: ‘மகா’ கேப்டன் ருதுராஜ் சதம் வீண்

அகமதாபாத்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரின் பைனலில், மகாராஷ்டிரா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச... மகாராஷ்டிரா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. கேப்டனும் தொடக்க வீரருமான ருதுராஜ் கெயிக்வாட் 108 ரன் (131 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அஸிம் காஸி 37, நவுஷத் ஷேக் 31*, சத்யஜீத் 27 ரன் எடுத்தனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் சிராக் ஜானி 3, பிரேரக், பார்த் பட், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்து வென்றது.

தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் - ஷெல்டன் ஜாக்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தேசாய் 50 ரன் எடுத்து வெளியேறினார். அபாரமாக விளையாடி சதம் அடித்த ஜாக்சன் 133 ரன் (136 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), சிராக் ஜானி 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மகாராஷ்டிரா பந்துவீச்சில் முகேஷ், விக்கி தலா 2, சத்யஜீத் 1 விக்கெட் எடுத்தனர். ஷெல்டன் ஜாக்சன் ஆட்ட நாயகன் விருதும், ருதுராஜ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் காலிறுதியில் 220*, அரையிறுதியில் 168, பைனலில் 108 ரன் விளாசினார். 10 இன்னிங்சில் அவர் 8 சதம் விளாசி அசத்தியதுடன், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: