லூதியானா கோர்ட்டில் குண்டு வெடிப்பு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து தேடிய குற்றவாளி கைது

புதுடெல்லி: லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி லூதியானாவில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங்கிற்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஒரு சர்வதேச அமைப்பின் தலைவருடன் சேர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து ஹர்பிரீத் சிங் நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: