அமெரிக்க மாஜி அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் (76), கடந்த சில நாட்களாக லேசான அறிகுறிகளுடன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர், தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இருந்தும் தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அதிபர் ஜோ பிடன், கோடை காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். முன்னாள் அதிபர் டிரம்ப் 2020 அக்டோபரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதேபோல் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் தீவிரம் குறையவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: