கிருஷ்ணராயபுரம் அருகே காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்ட பணி: தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை புனரமைக்கும் பணிகள். காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.சந்தீப் சக்சேனா,ஐஏஎஸ் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளை கதவணை அமைக்கப்பட்டுள்ளது, இந்த கதவணையின் மூலம் 1.05 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கும் முடியும். மேலும் கதவணையின் கிளை வாய்க்கால்கள் மூலம் கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 1.12 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கதவணையின் கீழ்புறம் மற்றும் கதவணை புனரமைக்கும் பணிகள் ரூ.185.265 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தற்போது வரை 55 சதவீத பணிகள் முடிவுற்ற உள்ளது.

மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து வெள்ள நீரை திருப்பி விடும் வகையில், புதிதாக கால்வாய் அமைத்து காவிரி, வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் கரூர் மாவட்டத்தில் ரூ.171.00 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீரை கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து திசை திருப்பி புதிதாக அமைக்கப்படும் கால்வாய்கள் மூலம் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலத்தடிநீரை மறு ஊட்டம் செய்வதற்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால்வாய் 6360 கன அடி நீரை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மட்டும் 1,852 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இந்தப் பணிகள் இதுவரை 58 சதவீதப் பணிகள் முடிவு பெற்று உள்ளது. இந்தப் பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீர்வளத்துறை டாக்டர் சந்தீப் சக்சேனா.ஐஏஎஸ், நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளின் தரம், பணிகளின் முன்னேற்றம், பணிகளை முடிக்க வேண்டிய காலம். ஒவ்வொரு பணிகளையும் எவ்வாறு தர கட்டுப்பாடுகளுடன் செய்யப்படுகிறது. என்பதை சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்திட உத்தரவிட்டார்கள்.

இதில், நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி வைகை, குண்டாறு இணைப்பு திட்ட நிலம் எடுப்பு தனி பிரிவு டிஆர்ஓ.கவிதா, குளித்தலை ஆர்டிஓ. புஷ்பாதேவி, அலுவலர் கண்காணிப்பு பொறியாளர். சுப்பிரமணியன், செயற்பொறியாளர்.சாரா, உதவி செயற்பொறியாளர்.சரவணன், கரூர் மாவட்ட காவேரி ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், கண்காணிப்பு பொறியாளர் சொர்ணகுமார், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: