பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதி: திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி

பிரேசில் : பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் உள்ள ஆல்பெர்ட் ஐன்ஸ்டின் மருத்துவமனையில் பீலே திடீரென அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்திய அவரது மகள் தந்தையின் உடல் நலத்தை மதிப்பீடு செய்வதற்காக சில பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார்.

மருத்துவமனை நிர்வாகமும் பீலேயின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து நடைபெற்று வரும் இந்நேரத்தில் பீலேவுக்கு எதுவும் நேர்ந்து விட கூடாது என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர். 82 வயதாகவும் பீலேவுக்கு குடல் பகுதியில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து இதய செயலிழப்பு மாற்று புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.

Related Stories: