ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திக்க உள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்த உள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அக்.28ல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் சில விளக்கம் கேட்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என விளக்கம் கேட்டகப்பட்டது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்துவரும் நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார்.

Related Stories: